Home Cinema News ‘அண்ணாத்த’ ஷூட்டிங் நிறுத்தம் – 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி.. ராஜினிகாந்துக்கு கரோனா நெகட்டிவ்

‘அண்ணாத்த’ ஷூட்டிங் நிறுத்தம் – 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி.. ராஜினிகாந்துக்கு கரோனா நெகட்டிவ்

73
1

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Pocket Cinema News

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 14-ம் தேதி ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

ALSO READ  Vijay: நடிகர் சரத்குமார் விஜய்யின் அரசியல் ஆசைகளை அன்போடு வரவேற்கிறார்".

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. வழக்கமாகச் செய்யப்படும் கரோனா பரிசோதனையின் போது 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. ரஜினிக்குச் செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்பது தெரியவந்தது. ஆனால் சென்னைக்கு 2 நாட்களுக்குப் பிறகே திரும்ப முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

ALSO READ  Captain Miller Update: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு செட்டில் தெலுங்கு நடிகர் இணைந்தார்

படப்பிடிப்பில் கரோனா தொற்று பரவல் செய்தி வைரலாக பரவி வருகிறது. கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையே படப்பிடிப்பு நடைபெற்றுது. மேலும் எப்படி கரோனா தொற்று பரவியது என்று படக்குழுவினர் தீவிரமாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

1 COMMENT

Leave a Reply