Home Box Office Thunivu box office collection day 10: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 10-வது நாள்...

Thunivu box office collection day 10: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 10-வது நாள் வசூல் ரிப்போர்ட்

0

Thunivu box office collection: அஜித் குமாரின் துணிவு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் 9 நாட்களில் டிக்கெட்கள் நல்ல வியாபாரம் செய்தது. எச் வினோத் இயக்கியுள்ள இப்படம் சர்வதேச சந்தையிலும் சிறப்பான வசூலை செய்து வருகிறது. மேலும் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொடக்கம் இதவிட வேற எதுவும் இருக்க முடியாது. ஜனவரி 19 அன்று இப்படம் ரூ 2.75 கோடி வசூல் செய்தது. இருப்பினும், 10 ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸில் துணிவு படம் ஒரு சிறிய சரிவைக் கண்டது.

Thunivu box office collection day 10: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 10-வது நாள் வசூல் ரிப்போர்ட்

அஜித்குமாரின் துணிவு படமும், தளபதி விஜய்யின் வாரிசு படமும் பாக்ஸ் ஆபிஸில் ஒரேநாளில் மோதியது, இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சமமாக வசூல் செய்து வருகிறது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி, அஜித் குமாரின் துணிவு படம் 10-ஆம் நாள் (ஜனவரி 20) இப்படம் ரூ 2.30 கோடி வசூலித்தது. இதைத் தொடர்ந்து, வார இறுதியில் படம் வேகத்தை அதிகரிக்கும் என்று வர்த்தக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாக்ஸ் ஆபிஸில், வலிமையின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை துணிவு படம் கடந்தது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா ட்விட்டரில் பதிவிட்டு, “#UAE பாக்ஸ் ஆபிஸில், #Thunivu ஜனவரி 15 ஆம் தேதி வரை $784,597 வசூல் செய்துள்ளது. இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். துணிவு படத்தில் அஜித் ஆன்டி ஹீரோவாக நடித்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version