Salaar worldwide box office collection day 5: பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய ‘சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம்’, திரையரங்குகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் ரூ 425 கோடியைத் தாண்டியதால், இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 ஆம் நாளில், படம் வசூலில் சரிவைக் கண்டது, ஆனால் இன்னும் இரட்டை இலக்கங்களில் வசூலித்து வருகிறது.
இந்த படம் 2023ல் ஒரு இதுவரை இல்லாத மிகப்பெரிய ஓப்பனிங் ஆகும். ‘சலார்’ ஹிந்தியிலும் ரூ. 100 கோடியைத் தாண்டி, திரையரங்குகளில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா கூறுகையில், இந்தி பதிப்பு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) இந்தியில் ரூ.9.50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆரம்ப மதிப்பீடுகளின்படி டிசம்பர் 26 அன்று இந்தியாவில் ரூ. 23.50 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. இது திங்கட்கிழமை (டிசம்பர் 25) இந்தியாவில் ரூ.46 கோடி வசூலித்ததை ஒப்பிடுகையில் இது பெரிய சரிவு. இப்படத்தின் ஐந்து நாள் மொத்த வசூல் இப்போது உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் ரூ 278.90 கோடியாக உள்ளது.
சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.23.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
- உலகம் முழுவது ரூ.35 கோடி வரை வசூலித்துள்ளது.
சலார்: பகுதி 1 – போர் நிறுத்தம் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.278 கோடி வரை வசூலித்துள்ளது.
- உலகம் முழுவதும் ரூ.425 கோடி வரை வசூலித்துள்ளது.
‘சலார்: பகுதி 1 – போர்நிறுத்தம்’ என்பது ‘கேஜிஎஃப்’ புகழ் பிரசாந்த் நீல் எழுதி இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, மைம் கோபி, ஸ்ரீயா ரெட்டி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரித்துள்ள ‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களின் படி எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு எங்கள் தமிழ் பாக்கெட் நியூஸில் இணைந்திருங்கள்.