Maharaja box office collection day 7: விஜய் சேதுபப்தி தனது 50வது படமான ‘மகாராஜா’ என்ற பெயரில் திரையரங்குகளில் ஜூன் 14 அன்று வெளியானது. எமோஷனல் த்ரில்லர் திரைப்படம் இன்று (ஜூன் 21) வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. ‘மகாராஜா’ தயாரிப்பாளர்கள் படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் எண்களை வெளியிட்டனர். இப்படம் 6 நாட்களில் ரூ 55.8 கோடி வசூலித்ததை உறுதிப்படுத்தினர்.
வர்த்தக உலகம் அறிக்கையின்படி, வேலை நாளான வியாழன் (ஜூன் 20) அன்று ‘மகாராஜா’ சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்தது, மேலும் படத்தின் மொத்த வசூல் சுமார் 60 கோடி ரூபாய் எட்டியுள்ளது. ‘மகாராஜா’ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் பல இடங்களில் நல்ல வசூல் செய்து வருகிறது. தமிழகத்தில் ‘மகாராஜா’ 38 கோடிக்கு அருகில் வசூலித்துள்ளது, அதே நேரத்தில் கேரளா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் இருந்து தலா 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ‘மகாராஜா’ படத்தின் வெளிநாட்டு வசூலும் பிரமாண்டமாக உள்ளது. படம் வெளிநாட்டு சந்தையில் ரூ.7 கோடிக்கு அருகில் வசூலித்தது.
இரண்டாவது வார இறுதியானது ‘மகாராஜா’ படத்திற்கு முக்கியமான ஒன்றாக இருக்கும், மேலும் முன்பதிவுகள் வலுவாக இருப்பதால் படம் அதன் வசூலில் நல்ல எண்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘மகாராஜா’ விஜய் சேதுபதியின் அதிக வசூல் செய்த படமாக உஎருவாக உள்ளது, மேலும் இது ஜூலை மாதம் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ வெளியாகும் வரை 2024 இல் அதிக வசூல் செய்த தமிழ் படமாகவும் இருக்கலாம். ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் ‘மகாராஜா’ படத்தை இயக்கியுள்ளார். அனுராக் காஷ்யப், நட்டி, பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.