Leo Box Office Day 13: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் 31 அன்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. 13வது நாளான இன்றும் இந்தியாவிலும் சர்வதேச சந்தையிலும் ‘லியோ’ பாக்ஸ் ஆபிஸில் நிலைத்து நிற்கிறது. தமிழ் திரையுலகில் ‘ஜெயிலர்’ படத்திற்குப் பிறகு ‘லியோ’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
அக்டோபர் 31 அன்று ‘லியோ’ திரைப்படம் 12 நாட்களில் உலகம் முழுவதும் 540 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். ஆக்ஷன் த்ரில்லரான இப்படம் அக்டோபர் 31ஆம் தேதி செவ்வாய்கிழமை இந்தியாவில் சுமார் ரூ.4.10 கோடியை வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. ‘லியோ’ தனது இரண்டாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நிலையாக உள்ளது. வார இறுதியில் வசூல் இன்னும் கூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் 13 நாள் மொத்த வசூல் ரூ.312 கோடியாக உயர்ந்துள்ளது.
லியோ இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவிள் 13-வது நாள் ரூ.4.10 கோடி வசூல் செய்தது.
- இந்தியாவின் மொத்தம் ரூ.312 கோடி வசூல் செய்தது.
லியோ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- உலாம் முழுவதும் 13-வது நாள் ரூ.6 கோடி வசூல் செய்தது.
- லியோ உலகம் முழுவதும் மொத்தம் ரூ.546 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் காணப்பட்டனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்த ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலமும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய மேலும் மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு, எங்களுடன் இணைந்திருங்கள்.