Home Cinema Box Office Ayalaan Box Office Collection Day 5: அயலான் உலகம் முழுவதும் 5ஆம் நாள் பாக்ஸ்...

Ayalaan Box Office Collection Day 5: அயலான் உலகம் முழுவதும் 5ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Ayalaan Box Office Collection Day 5: பெரிதும் பேசப்பட்ட அயலான் திரைப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சரியான பொங்கல் பரிசை வழங்கியுள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன் மற்றும் பால சரவணன் ஆகியோரும் நடித்துள்ள இந்த அயலான் பல ரசிகர்களின் சலசலப்புகளுக்கு மத்தியில் வெளியானாலும், அது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது.

Sacnilk இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அயலான் ரூ 3.45 கோடி முதல் நாள் வசூலைக் கண்டது, அன்றிலிருந்து தொடர்ச்சியான வளர்ச்சியைக் காண்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த இந்தப் படம் 2ஆம் நாள் ரூ.4.85 கோடியும், 3ஆம் நாள் ரூ 5.65 கோடியும் வசூலித்தது. திங்கள் (4வது நாள்) 6.60 கோடி ரூபாய் வசூலித்தது. அயலான் பாக்ஸ் ஆபிஸில் 5வது நாள் சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூலித்து தற்போது இந்தியாவில் இந்த படம் ஒட்டுமொத்த வசூல் ரூ.27.25 கோடி நெருங்கியுள்ளது. தனுஷ் நடித்த பீரியட் ஆக்ஷன் அட்வென்ச்சர் கேப்டன் மில்லர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்திற்கு கடுமையான போட்டியை அளிக்கிறது. 

Ayalaan Box Office Collection Day 5: அயலான் உலகம் முழுவதும் 5ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

அயலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5

  • இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 
  • உலகம் முழுவது ரூ.5.50 கோடி வரை வசூலித்துள்ளது. 

அயலான் இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  • இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரூ.27.25 கோடி வரை வசூலித்துள்ளது.
  • உலகம் முழுவதும் ரூ.40 கோடியை கடக்க உள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் தரவு பல்வேறு ஆதாரங்களின் படி எங்களின் சொந்த ஆராய்ச்சியின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு தோராயமாக இருக்கலாம் மற்றும் தரவின் நம்பகத்தன்மை குறித்து தமிழ் பாக்கெட் நியூஸ் எந்த பொறுப்பை ஏற்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி மற்றும் சமீபத்திய செய்திகளுக்கு எங்கள் தமிழ் பாக்கெட் நியூஸில் இணைந்திருங்கள்.

 

Leave a Reply