Home Cinema Review Varisu: விஜயின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன மெகா பவர் ஸ்டார்

Varisu: விஜயின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன மெகா பவர் ஸ்டார்

32
0

Varisu: டோலிவுட் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த படம் வாரிசு. இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வர உள்ளது. இந்த பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோதலை சந்திகவுள்ளது.

Also Read: அஜித்தின் துணிவு படத்தின் ரன்டைம் மற்றும் சென்சார் விவரங்கள்

ரங்கஸ்தளம் மற்றும் RRR மூலம் உலக அளவில் புகழ் பெற்ற மெகா ராம் சரண் மீபத்தில் வாரிசு படத்தை பார்த்தார் என்பது தற்போது சுவாரஸ்யமான செய்தி. RC15 தொடர்பான வேலைகளுக்காக சென்னையில் உள்ள இசையமைப்பாளர் தமனின் ஸ்டுடியோவிற்கு ராம் சரண் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு வந்த தில் ராஜு, ராம் சரணை சந்தித்த நிலையில் அவர் வாரிசு படத்தை பார்ப்பதற்காக பிரைவேட் ஸ்கிரீனிங்கிற்கு ஏற்பாடு செய்தார். ராம் சரண் படத்தை பார்த்தபின் படகுழுவினரை மிகவும் பாராட்டினார்.

ALSO READ  Maaveeran: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்த மாமன்னனின் முதல் விமர்சனம்!

Varisu: விஜயின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன மெகா பவர் ஸ்டார்

வாரிசு படத்தில் ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், குஷ்பு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யபடுகிறது.

Leave a Reply