Home Cinema Review Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

70
0

Iravin Nizhal: இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான பார்த்திபன். தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். மற்றொரு வித்தியாசமான முயற்சி தான் இரவின் நிழல். உலகிலேயே முதல் முறையாக ‘நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக எடுக்கப்பட்டுள்ளது. இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மாடுவில் வெளிவந்துள்ள படம் தான் இரவின் நிழல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் 

Also Read: Chandramukhi-2: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் – காரணம் இதுதான்

கதை

சினிமா ஃபைனான்சியராக இருக்கும் பார்த்திபன் (நந்து). அவரிடம் வட்டிக்கு பணம்வாங்கி படமெடுத்த இயக்குனர், நஷ்டமடைறார். இயக்குனர் கடனை திரும்ப கொடுக்கமுடியாத நிலயில் தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்க்கு பார்த்திபன் (நந்து) காரணம் என்று, அவரது மனைவி மற்றும் மகள் பார்த்திபனை (நந்து) வெறுத்து ஒதுக்கி வெகு தூரம் சென்றுவிடுகிறீர்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை. 

Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

படத்தை பற்றிய அலசல்  

படம் ஆரம்பத்தில் படத்தின் மேக்கிங்கை போட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் பார்த்திபன். ஆரம்பமே படம் க்ளாப்ஸ் கிடைக்க துவங்குகிறது. மேக்கிங்கில் ஒவ்வொரு முறை என்ன தப்பு செய்தோம் என்பதை தெளிவாக காட்டுகிறார் பார்த்திபன். மொத்தமாக 23 டேக்குக்கு பிறகு முழு திரைப்படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து முடித்துள்ளார்.

Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா

ALSO READ  ஜாக்பாட் படம் டுவிட்டரில் தருமாறு வரவேற்பு

1971ல் துவங்கும் கதையில், கணவனால் கொலைசெய்யப்பட்ட ரத்த சகதியில் கிடக்கும் தன்னுடைய தாயின் சடலத்தில் பால் குடிக்கும் கைக்குழந்தையாக அறிமுகமாகிறார் நந்து. உலகில் பல படங்கள் சிங்கிள் ஷாட்டில் வந்துள்ளது. ஆனால், ஆனால் உலகிலேயே முதல் முறையாக ‘நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ படம் இதுதான். 64 ஏக்கர் பரப்பளவில் நகராத செட்டை பிரமாதமாக உருவாகியுள்ளனர். படத்தை முழுமையாக தனது கைகளில் எடுத்து சென்ற ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்துள்ள அனைவரும் நடிப்பில் தனித்து நிற்கிறார்கள். குறிப்பாக அனந்த கிருஷ்ணன், லட்சுமியாக வரும் நடிகை சினேகா, சிலக்கம்மாவாக வரும் பிரிகடா சகா, வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சாய் பிரியங்கா அனைவரும் நடிப்பு சிறப்பு.

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

ALSO READ  VTK 2: சிம்புவின் VTK புதிய டிரெய்லர் மற்றும் VTK 2 படத்தின் ப்ரோமோ

இயக்குனராகவும், நடிகராகவும் அசத்திவிட்டார் பார்த்திபன். ஒவ்வொரு காட்சியையும் அருமையக செதுக்கியுள்ளார். நான் லீனியர் திரைக்கதையில் பட்டையை கிளப்புகிறார். தனது இசையாலும் ரசிக்க வைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். தனது பின்னணி இசையில் படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்கிறார். பாடல்களும் அருமையாக வந்துள்ளது.  

பிளஸ் 

இரவின் நிழலில் படம், தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு நகர்த்தும் முயற்சி வெற்றி.

மைனஸ் 

படத்தை கொண்டாடுவதை விட்டுவிட்டு, படத்தின் குறை கண்டு பிடிப்பவர்கள்.

Leave a Reply