Home Cinema Review Captain Miller Update: தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மற்றொரு...

Captain Miller Update: தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மற்றொரு இளம் நடிகை

38
0

Captain Miller: தனுஷின் நானே வருவேன் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், நடிகர் தனுஷின் அடுத்த படமான கேப்டன் மில்லர் என்ற படம் உருவாகிறது. முரட்டுத்தனமான தோற்றத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்று அறிவித்த நிலையில் தற்போது அவரக்கு அடுத்தபடியாக ஒரு இளம் நடிகை நடிக்கிறார் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

Captain Miller Update: தனுஷ், பிரியங்கா மோகன் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த மற்றொரு இளம் நடிகை

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைபடம் கேப்டன் மில்லர். தற்போது இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சந்தீப் கிஷான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷான் தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார். தயாரிப்பு நிறுவனம் அவரை கேப்டன் மில்லர் படத்தில் வரவேற்றவுடன், சந்தீப் தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ  Leo First Review: லியோ படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது

Also Read: இந்தியன் 2 படத்திற்கு கமல்ஹாசனின் புதிய கெட்டப் – வைரலாகும் புகைப்படங்கள்

கேப்டன் மில்லர் படத்தில் இருந்து தனுஷின் நியூ லூக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் பிரியங்கா. மோகனுக்கு அடுத்த படியாக நிவேதா சதிஷ் என்ற இளம் நடிகை இணைந்திருபதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் வெளியாகியுள்ளது. சில்லு கருப்பட்டி, குழல், செத்தும் ஆயிரம் ஃபோன் ஆகிய வெப் சீரிஸ்யில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிவேதா சதீஷ். தற்போது தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply