Home Cinema News Vettaiyaadu Vilaiyaadu 2: கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் ஒன் லைன் கதையை பகிர்ந்த...

Vettaiyaadu Vilaiyaadu 2: கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் ஒன் லைன் கதையை பகிர்ந்த எழுத்தாளர்

85
0

Vettaiyaadu Vilaiyaadu 2: புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் ஒரு அளித்த நேர்காணல் பேட்டியில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தில் தனது கதையைப் பற்றி பேச, அதே நேரத்தில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாக கதையை பற்றி பகிர்ந்தார். 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்து பாக்ஸ் ஆபீஸில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’ தற்போது எழுத்தாளர் ஜெயமோகன் படத்தின் தொடர்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டார். உலகநாயகன்’ கமல்ஹாசன் டிசிபி ராகவன் ஐபிஎஸ் ஆகநடித்த இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.

ALSO READ  Varisu: விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் - வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது

Also Read: உங்கள் அபிமான OTT தளத்தில் இப்போது விருமன் திரைப்படம் வெளியாகியுள்ளது

கமல்ஹாசன் மற்றும் கௌதம் மேனன் இருவரும் சமீபத்தில் வேட்டையாடு விளையாடு 2 உருவாகி வருவதை உறுதிப்படுத்திய நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் இப்போது முதல் முறையாக அதன் தொடர்ச்சிக்கான ஒரு வரிக் கதையைப் பகிர்ந்துள்ளார். ஜெயமோகன், “நாங்கள் ஒரு வரியைப் பற்றி விவாதித்தோம், முதல் படத்தில் சர்வீஸில் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தார். இப்போது இந்த இரண்டாம் பாகத்தில் ஓய்வு பெற்று இருக்கும் அதிகாரியை மீண்டும் பணிக்கு அழைப்பார்கள். அப்படியானால் ஓய்வு பெற்ற அதிகாரியை மீண்டும் ஏன் அழைக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.

ALSO READ  Mayilsamy passes away: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்

Vettaiyaadu Vilaiyaadu 2: கமல்ஹாசன் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் ஒன் லைன் கதையை பகிர்ந்த எழுத்தாளர்

கடமைக்குத் திரும்பும் அந்தக் கட்டத்தில் இருந்து கதை ஆரம்பித்து முன்னோக்கிச் செல்லும். வேட்டையாடு விளையாடு 2 க்கான சலசலப்பு வெந்து தனித்து காடு ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்குப் பிறகு, கமல்ஹாசன், கௌதம் மேனன் அதன் தொடர்ச்சிக்கான யோசனையை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே பகிர்ந்து கொண்டதாகக் கூறினார். அதோடு வேட்டையாடு விளையாடு 2 படத்தின் ஸ்கிரிப்டை ஜெயமோகன் உருவாக்கி வருவதாக கௌதம் மேனன் அனைவருக்கும் தெரிவித்தார்.

Leave a Reply