Home Cinema News Custody: வெங்கட் பிரபுவின் கஸ்டடி டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Custody: வெங்கட் பிரபுவின் கஸ்டடி டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

18
0

Custody: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் தெலுங்கு-தமிழ் இருமொழி படம் கஸ்டடி. மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு பிரமாதமான மறுபிரவேசம் கொடுத்த வெங்கட் பிரபு, இந்த போலீஸ் அதிரடி படத்தை பிரம்மாண்டமாக இயக்குகியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.

Also Read: சிம்புவின் ‘STR 48’ படத்தில் கமல்ஹாசன் ஒரு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

தற்போதைய செய்தி என்னவென்றால், கஸ்டடி டீசர் நாளை வெளியாகும் என தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்த நிலையில் இப்போது பட குழு இணையதளத்தில், டீசர் நாளை மாலை 04:51 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவித்தது. டீஸர் வெளியீட்டு நேரத்தை அறிவித்து, தண்ணீருக்கு அடியில் நாக சைதன்யா டிரக் கதவைத் திறக்க முயற்சிப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அரவிந்த் சுவாமி, பிரியாமணி, சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

Leave a Reply