Home Cinema News Vijay: வாரிசு இயக்குனர் படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு – அதிர்ச்சியில் படக்குழுவினர்

Vijay: வாரிசு இயக்குனர் படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு – அதிர்ச்சியில் படக்குழுவினர்

54
0

Vijay: தில் ராஜு தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் விஜய் நடித்துவருகிறார். தளபதி விஜய் இவர்களுடன் முதல்முறையாக கூட்டணி வைத்துள்ளார். ரஷ்மிகா மாந்தான, சம்யுக்தா சரத்குமார், ஷியாம், பிரபு, எஸ். ஜே சூரியா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா ஆகிய முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்த படம் ஒரு குடும்ப கதையாக உருவாகி வருகிறது. விஜய் இப்படத்தில் ஆப் டிசைனராக நடித்துவருகிறார் என்று கூறுகின்றனர்.

ALSO READ  Suriya 42 Title: சூர்யா 42 படத்தின் சக்திவாய்ந்த தலைப்பு இதுதான்

Also Read: கமல் மற்றும் ஜி.வி.எம் ‘வேட்டையாடு விளையாடு 2’ பற்றிய வைரல் அப்டேட்!

தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் பூஜை தொடங்கியதில் இருந்தே படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில் மருத்துவமனையில் விஜய், பிரபு ஆகியோரின் காட்சி படமாக்கபட்டபோது அங்கு மிக அருகிலேயே இருந்து கொண்டு யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ சமூக வைலைதலங்களில் வைரலானது.

ALSO READ  Thug Life: ‘தக் லைஃப்’ கமல்ஹாசனுடன் இணைந்த 'நாயகன்' நடிகர்

Vijay: வாரிசு இயக்குனர் படக்குழுவினருக்கு அதிரடி உத்தரவு - அதிர்ச்சியில் படக்குழுவினர்

அதனால் படத்தின் இயக்குனர் வம்சி படகுழுவினருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அது என்னவென்றால், அனைவருக்கும் வாரிசு படபிடிப்பு தளத்தில் செல்ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறிவருகின்றனர். இதே போன்று விஜய் நடித்த தளபதி 62 படமான பைரவா படப்பிடிப்பு தளத்தில் செல்ஃபோன் பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

Leave a Reply