Home Cinema News Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் வார இறுதியில் உலக அளவில் வசூல் எத்தனை கோடி தெரியுமா

Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் வார இறுதியில் உலக அளவில் வசூல் எத்தனை கோடி தெரியுமா

74
0

Thiruchitrambalam Box Office: தமிழில் சமீபத்தில் வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டு வருகுறது. மித்ரன் ஜவஹர் இயக்கிய பீல் கூட திரைப்படம் தற்போது வார இறுதியில் உலகளவில் ₹50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. திருச்சிற்றம்பலத்தின் பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையை திரைப்பட வர்த்தக விநியோகிஸ்தர்கள் (பிலிம் டிரேட்) மற்றும் திரைப்படதுறை கண்காணிப்பாளர்கள் ட்விட்டரில் அறிவித்தனர். முதல் வார இறுதியில் இப்படம் ₹50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

ALSO READ  Lyca Productions: லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த ஆண்டு ஐந்து கிரேஸி படங்களை வெளியிடவுள்ளது

Also Read: ரஜினிகாந்த் மீது தனது அபிமானத்தை வெளிப்படுத்திய தனுஷ்

சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். பிரம்மாண்டம் மட்டும் ஜெயிப்பதில்லை உணர்ச்சி-தான் ஜெயிக்கும் மீண்டும் ஒருமுறை தனுஷ் கே.ராஜா சாரின் ‘திருச்சித்திரம்பலம்’ மூலம் நிரூபித்துள்ளார். திருச்சிற்றம்பலம் மித்ரன் ஜவஹர் இயக்கிய ஒரு உணர்வுபூர்வமான குடும்ப படம். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் எடிட்டர் பிரசன்னா ஜிகே ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

ALSO READ  Merry Christmas: விஜய் சேதுபதியை பாராட்டிய கத்ரீனா கைஃப்

Thiruchitrambalam Box Office: திருச்சிற்றம்பலம் வார இறுதியில் உலக அளவில் வசூல் எத்தனை கோடி தெரியுமா

திருச்சிற்றம்பலத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் தனுஷ் ஃபுட் டெலிவரி பையனாக நடித்துள்ளார். இயக்குனர் மித்ரன் ஜவஹர் தனுஷுடன் நான்காவது முறையாக இணைந்துள்ள படம் இது. இவர்கள் இருவரும் குட்டி, யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply