Home Cinema News Udhayanidhi Stalin: ‘மாமன்னன்’ படத்தின் பிரமிக்க வைக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

Udhayanidhi Stalin: ‘மாமன்னன்’ படத்தின் பிரமிக்க வைக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

24
0

Udhayanidhi Stalin: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த ‘மாமன்னன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி ‘மாமன்னன்’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே நாம் அறிந்தோம். இந்த நிலையில் இன்று படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டர் நேற்று இரவு இணையத்தில் கசிந்த நிலையில் படக்குழு இன்று அதிகரப்பூரவமாக வெளியிட்டுள்ளனர்.

ALSO READ  PS-2 Release date out: பொன்னியின் செல்வன்-2 ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேலுவும் உதயநிதி ஸ்டாலினும் மிரட்டும் முகத்துடன் மேஜை மீது அமர்ந்துள்ளனர். அரசியல்வாதி போல் உடையணிந்த வடிவேலு, வெள்ளை சட்டையில் ரத்தக்கறையுடன் கையில் துப்பாக்கியும், முகத்தில் காயங்களுடன் இருக்கும் உதயநிதியின் வாளையும் பிடித்துள்ளார். அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

Udhayanidhi Stalin: 'மாமன்னன்' படத்தின் பிரமிக்க வைக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், செல்வா ஆர்.கே படத்தொகுப்பும், குமார் கங்கப்பன் கலை இயக்கமும் செய்கிறார். மாமன்னன் ஜூன் மாதம் திரையரங்குகளுக்கு வரவுள்ளதாக போஸ்டர் தெரிவிக்கிறது. இப்படத்தை ஜூன் 29-ம் தேதி பக்ரீத் அன்று வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை கவனித்துக்கொண்டார், சாண்டி நடனத்தை கையாண்டார்.

Leave a Reply