Home Cinema News Leo: பிரமாண்டமாக உருவாகும் லியோ படத்தின் பாடல் காட்சி – மாஸ்டர் படத்தைவிட நான்கு மடங்கு...

Leo: பிரமாண்டமாக உருவாகும் லியோ படத்தின் பாடல் காட்சி – மாஸ்டர் படத்தைவிட நான்கு மடங்கு அதிகமான நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்

74
0

Leo: லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ படத்தில் விஜய், த்ரிஷா மற்றும் சஞ்சய் தத் ஆகியோருடன் படத்தின் படப்பிடிப்பை மே முதல் வாரத்தில் சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் மீண்டும் தொடங்க குழு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படும் என்ற தகவலை நாம் ஏற்கனேவே அறிந்திருப்போம். லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யின் அறிமுக பாடலான ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு, 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களை பயன்படுத்தினார். ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ ஆகிய இரண்டு படங்களுக்கும் ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். முழு படப்பிடிப்பையும் ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  Chandramukhi 2: ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

இப்போது, ​​லோகேஷ் கனகராஜ் லியோவில் ஒரு பெரிய பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாடலில் 2000 நடனக் கலைஞர்கள் பங்கேற்க இருகின்றனர, மேலும் பல நட்சத்திரங்களை இயக்குனர் எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பயிற்சி அமர்வுகள் 10 நாட்கள் நீடிக்கும் மற்றும் பாடலின் படப்பிடிப்பு 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக இருகிறார்.

ALSO READ  Aishwarya Rajesh: ராஷ்மிகா மந்தனா பற்றி ஐஸ்வர்யா ராஜேஷின் விளக்க பதிவு - பதில் கூறிய ராஷ்மிகா

Leo: பிரமாண்டமாக உருவாகும் லியோ படத்தின் பாடல் காட்சி - மாஸ்டர் படத்தைவிட நான்கு மடங்கு அதிகமான நடன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்

படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தபின் பிரமாண்ட பாடலை படமாக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லியோவில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த், சாண்டி, ஜனனி, அபிராமி வெங்கடாசலம் மற்றும் பலர் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், பான்-இந்திய மொழிகளில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

Leave a Reply