Home Cinema News Kulasamy: விஜய் சேதுபதி வசனத்தில் ‘குலசாமி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

Kulasamy: விஜய் சேதுபதி வசனத்தில் ‘குலசாமி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

96
0

Kulasamy: குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், விமல் நடிக்கும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘குலசாமி’. இப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் மற்றும் வில்லனாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜனனி பாலு நடித்துள்ளார்கள். தற்போது குலசாமி படத்தின் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி என்னவென்றால், இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மோஷன் போஸ்டரில், குலசாமி ஆக்‌ஷன் நிறைந்த படம் என்பதும், மேலும் விமல் முரட்டுத்தனமான மேக்ஓவரில் இடம்பெறுவதும் தெரிகிறது.

ALSO READ  Pushpa -2: புஷ்பா 2 இன்று பூஜையுடன் துவங்குகிறது

Kulasamy: விஜய் சேதுபதி வசனத்தில் 'குலசாமி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

குலசாமி படத்தின் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்திற்கு வசன எழுத்தாளராகப் பங்களித்திருப்பதுதான் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு மகாலிங்கம் இசையமைத்துள்ளார். போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், கர்ண ராஜா, மகாநதி சங்கர், முத்து பாண்டி, ஜெய சூர்யா, லாவண்யா, ஷரவண சக்தி மற்றும் பல துணை நடிகர்களுடன் தாராள பிரபு புகழ் தன்யா ஹோப் கதாநாயகியாக நடிக்கிறார்.

ALSO READ  Indian 2: கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 முதல் பாடல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது

MIK புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் பேனர் கீழ இளையராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு மகாலிங்கம் இசையமைக்க, வைட் ஆங்கிள் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணன் எடிட் மற்றும் கனல் கண்ணன் ஸ்டண்ட் கோரியோகிராஃபி பிரிவுகளை வழிநடத்தியுள்ளனர்.
குலசாமி திரைப்படம் 21 ஏப்ரல் 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Leave a Reply