Home Cinema News LGM First Look: தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

LGM First Look: தோனி தயாரிக்கும் LGM படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

51
0

LGM: இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமானார். ‘எல்ஜிஎம்'( Lets Get Married) என்ற சுவாரஸ்யமான தலைப்புடன் சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் தற்போது ஹாட் செய்தி என்னவென்றால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் பற்றிய ஹாட் அப்டேட்

இப்படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், கதாநாயகி இவானா மற்றும் பழம்பெரும் நடிகை நதியா ஆகியோர் திருமண மோதிரத்துக்குள் லாக் செய்து இருப்பது ‘எல்ஜிஎம்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்டுகிறது. இப்படம் ஒரு வேடிக்கை நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

யோகி பாபு மற்றும் ஆர்.ஜே. விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பா ‘எல்ஜிஎம்’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடித்துவிட்டு இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply