Home Cinema News Samantha: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் சென்சார் மற்றும் ரன் டைம் வெளியாகியுள்ளது

Samantha: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் சென்சார் மற்றும் ரன் டைம் வெளியாகியுள்ளது

194
0

Samantha: சமந்தா மற்றும் தேவ் மோகன் நடிப்பில் இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் சாகுந்தலம். வருகிற வெள்ளிக்கிழமையன்று பல மொழிகளில் திரைக்கான இருக்கிறது இப்படம். ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் மல்டிபிளெக்ஸில் சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் ஸ்பெஷல் பிரீமியர் காட்சி நடைபெற்றது. காளிதாசரின் புராண கதையை தற்போது படமாக்கி இருக்கிறார் இயக்குனர் குணசேகர். மலையாள நடிகர் தேவ் மோகன் சாகுந்தலம் படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

ALSO READ  Vijay sethupathi new combo: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன்

Samantha: சமந்தாவின் சாகுந்தலம் படத்தின் சென்சார் மற்றும் ரன் டைம் வெளியாகியுள்ளது

தற்போது இப்படத்தை பற்றி வெளியாகி இருக்கும் சூடான தகவல் எனவென்றால் இப்படம் சென்சார் பணிகளை முடித்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது. படம் 142 நிமிடங்கள் (2 மணி நேரம் 22 நிமிடங்கள்) நீளம் கொண்டது என்று கூறப்படுகிறது. பிரம்மமணி சர்மா இசையமைக்கிறார். பிரகாஷ் ராஜ், மோகன் பாபு, சச்சின் கெடேகர், அதிதி பாலன், அனன்யா நாகல்லா, கௌதமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா இளவரசர் பரதனாக நடிக்கிறார். இயக்குனர் குணசேகரின் மகளான நீலிமா குணா இப்படத்தை குணா டீம் ஒர்க்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார்.

Leave a Reply