Home Cinema News Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் – வைரலாகும் வீடியோ

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் – வைரலாகும் வீடியோ

23
0

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்து வருகிறார். இவர் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 

Also Read: Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2

‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கதில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், மற்றும் சத்யராஜ் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவில், தமன் இசையில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் - வைரலாகும் வீடியோ

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவித்தபடி அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. அதன்படி 1986-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அந்த வீடியோவில் ரஜினிகாந்த் போன்றவே சிவகார்த்திகேயன் பேசி நடித்து இருந்தார். மற்றும் சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Also Read: Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம்

ALSO READ  Jailer: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிவகார்த்திகேயனின் மறைந்த தந்தையின் நிஜ வாழ்க்கை கதை

தற்போது சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு ஜினிகாந்த் பட பெயரை வைத்திருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சிவகார்த்திகேயன், ரஜினியின் தீவிர ரசிகரான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருக்குறது. 

Leave a Reply