Rudhran: ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் திரைப்படம் ருத்ரன். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பல படங்களைத் தயாரித்த இயக்குனர் எஸ்.கதிரேசன் ருத்ரன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஆர் சரத்குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். காஞ்சனா படத்திறக்கு பின் லாரன்ஸ் மற்றும் சரத்குமார் கூட்டனி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ருத்ரன் படத்தை ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இந்தி மற்றும் பிற மொழி டப்பிங் உரிமையை வாங்கிய ரெவென்சா குளோபல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தால் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது, படத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தயாரிப்பு நிறுவனம், முதல் கட்டமாக ருத்ரன் தயாரிப்பாளருக்கு பெரும் தொகையை கொடுத்ததாக கூறினர். படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடனான டப்பிங் உரிமை ஒப்பந்தத்தை மேக்ஸ் ஆஃப் திடீரென ரத்து செய்ததால். அன்றைய தினம் படத்தை வெளியிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும், அதனால் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது என்றும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதால், தமிழ் புத்தாண்டு விடுமுறையில் படத்தை வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். ருத்ரன் திரையரங்குகள், OTT மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் வெளியிடப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, நடுவர் மன்றம் மூலம் பிரச்சினையை தீர்க்க இரு தயாரிப்பு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டது. தற்போது, படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்