Home Cinema News Pudhia Paadhai-2: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2

Pudhia Paadhai-2: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2

27
0

Pudhia Paadhai-2: தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என்று சொன்னால் நமக்கு முதலில் நினைவுக்கு வரும் இயக்குனர் பார்த்திபன் என்று கூறலாம். ஏனென்றால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் இயக்கத்தில் வரும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும்.

Also Read: .தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

இயக்குனர் பார்த்திபன்

1989 இல் ‘புதிய பாதை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த புள்ளகுட்டிகாரன், பொண்டாட்டி தேவை, சரிகம பதனி, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் சுகமான சுமைகள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பல படங்களை இயக்கியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அந்த படம் அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது. தற்போது பார்த்திபன் இயக்கதில் ‘இரவின் நிழல்’ என்று ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். கூடியவிரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கும் இந்த படம் ஒரு வித்தியாசமான பாணியில் இயக்கியுள்ளார்.

ALSO READ  Pathu Thala first single: சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது தெரியுமா?

Also Read:
Vikram: சீயான் விக்ரம் உடல்நிலை எப்படி உள்ளது – மருத்துவமனை விளக்கம்

புதிய பாதை-2

இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன் புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதோடு அதில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். அதோடு அந்த நிகழ்ச்சியில் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். வித்தியாசமான முயற்சி எடுத்து தோல்வி அடைந்த படம் எது என்று கேட்டபோது குடைக்குள் மழை என்று கூறியுள்ளார் பார்த்திபன். அடுத்த கேள்வியாக உங்கள் தலைமுறை இயக்குனர்களில் இப்போது இருக்கும் இளம் இயக்குனர்களிடம் போட்டி போடும் ஒரே இயக்குனர் நீங்கள் தாங்கள் சமகால இயக்குனர் சருகியது எங்கே என்று கேட்கப்பட்டது.

Pudhia Paadhai-2: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2

அதற்கு பார்த்திபன், தன்னம்பிக்கை இழந்த தருணம் தான் அவர்கள் சருகிய இடம் என்றும் தனது உதவி இயக்குனர் எச். வினோத் அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார். அவருக்கு போட்டியாக வித்தியாசமான பாணியில் படத்தை கொடுக்க உழைத்துவருவதாகவும் இது தான் இருவருக்கும் நடக்கும் ஓர் ஆரோக்கியமான போட்டி என்று சாதுவாக கூறியுள்ளார் பார்த்திபன். பின் அடுத்த கேள்வியாக புதிய பாதை இரண்டாம் பாகம் பற்றி கேட்கப்பட்டது. இது தொடர்பாக தயாரிப்பாளர் தானுவிடம் புதிய பாதை படத்தின் கதையை மாற்றி சொன்னேன். கதை கேட்ட தயாரிப்பாளர் தானு கதை நன்றாக இருக்கிறது இதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ALSO READ  Maharaja: விஜய் சேதுபதியின் மகாராஜா வெளியீடு தேதி மற்றும் OTT ஒப்பந்த பார்ட்னர் விவரம் இதோ

Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் 

முதல் படம்

இது தொடர்பாக கூடியவிரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணி இணைந்தால் பார்த்திபன் இயக்கத்தில் பெரிய நடிகர் நடிக்கும் படம் இதுவே முதல் முறை அதோடு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

Leave a Reply