Home Cinema News Thunivu VS Varisu: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?

Thunivu VS Varisu: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?

73
0

Thunivu VS Varisu: வரும் பொங்கலுக்கு அஜித் மற்றும் விஜய் நடித்த படங்கள் ஒன்றாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்தே துணிவு vs வாரிசு படங்கள் பற்றி அனைத்து சமூக ஊடக தளங்களிலும் தீயாக ட்ரெண்டிங்கில் உள்ளது. பின்னர் இரண்டு படங்களும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ‘துணிவு’ 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டதில், அதில் ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் ‘வாரிசு’ படத்துடன் முதல் நாள் மோதள் இருக்காது என்று தெரிகிறது. இந்த அதிகாரப்பூர்வ செய்தி எந்த நேரத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Vijay Sethupathi: பிரபல தெலுங்கு இயக்குனருடன் விஜய் சேதுபதியின் அடுத்த படம்?

Thunivu VS Varisu: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?

இதற்கிடையில் ‘வாரிசு’ படமும் தணிக்கை செய்யப்பட்டு க்ளீன் யு சான்றிதழ் மற்றும் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. படம் திட்டமிட்டபடி ஜனவரி 12 வியாழன் அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (ஜனவரி 4 ஆம் தேதி) டிரெய்லர் வெளியீட்டில் எதிர்பார்க்கப்படுகிறது. ‘துணிவு’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார், போனி கபூர் தயாரித்துள்ளார், ஜிப்ரான் இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ALSO READ  Simbu 49: முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைகிறார் சிம்பு - ஹாட் நியூஸ்

Thunivu VS Varisu: துணிவு VS வாரிசு முதல் நாள் மோதல் இல்லையா?

வாரிசு எஸ். தமன் இசையமைக்க தில் ராஜு தயாரிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் பல நட்சத்திர நடிகர்கள் குழு துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Leave a Reply