Home Cinema News Chandramukhi-2: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் – காரணம் இதுதான்

Chandramukhi-2: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் – காரணம் இதுதான்

59
0

Chandramukhi-2: நடன இயக்குனராக இருந்து நடிகராகவும், இயக்குநராகவும், சமூக சேவகர் என்று பல பணிகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் பேய் படங்களை இயக்குவதில் வல்லவர் என்றே சொல்லலாம். அதுவும் திரில்லர் மற்றும் காமெடி கலந்த படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் முனி, காஞ்சனா பார்ட் 1, 2, 3 என்று மூன்று பாகங்களாக இயக்கி ஹிட் கொடுத்துள்ளார்.

Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா

ALSO READ  Mani Ratnam: பொன்னியின் செல்வன்' முதல் சிங்கிள் எப்போது வெளிவருகிறது தெரியுமா?

அந்த மூன்று படங்களில் சிறிதளவும் சுவார்யசம் குறையாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் ஒரு குடும்ப பேய் படமாக அமைந்திருந்தது.
தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி பார்ட் 2 படம் உருவாக இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு, நாசர், பிரபு என்று பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ALSO READ  Kanguva Update: சூர்யாவின் 'கங்குவா' அடுத்த கட்டத்தை தொடங்குகிறது - அதிகாரப்பூர்வ புதுப்பிப்பு

Chandramukhi-2: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் – காரணம் இதுதான்

17 வருடங்கள் கழித்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்திற்கு பதில் லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். பி. வாசு இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இன்று அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் ராகவா லாரன்ஸ். சந்திரமுகி 2 படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிவருகிறது.

Leave a Reply