Home Cinema News Breaking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கிறாரா?

Breaking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கிறாரா?

0

LEO: RRR படத்திறக்கு பிறகு மெகாபவர் ஸ்டார் ராம் சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் RC-15 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை பற்றின அறிவிப்பு வந்ததிலிருந்தே, ராம்சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் படங்கள் அனைத்தும் ஹீரோக்களை பிரம்மிக்கவைக்கும் விதத்தில் இருக்கும்.

Breaking: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கிறாரா?

தற்போது செய்தி என்னவென்றால், தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் மெகாபவர் ஸ்டார் ராம் சரண் ஒரு பகுதியாக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த ஒரு செய்தி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியாக தான் உள்ளது.

லியோ படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவில் காட்டப்பட்டுள்ள கார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தது என்று ஒரு சில நெட்டிசன்கள் லாஜிக்கைக் கொண்டு வந்துள்ள நிலையில், படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் கண்டிப்பாக இருப்பார் என்று கூறப்படுகிறது. லியோவைப் பற்றி இந்த செய்தி ரசிகர்களின் கோட்பாடுகள் ட்விட்டரில் வைரலாகி, படத்திற்கு பிரமாதமான ஹைப்பைக் கொண்டு வருகின்றன. தற்போது ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version