Home Cinema News Ajith Kumar: ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனாக நடிக்கிறாரா?

Ajith Kumar: ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனாக நடிக்கிறாரா?

22
0

Ajith Kumar: தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்குமார் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி தடம் பதித்துள்ளார். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மீண்டும் இவர் பாக்ஸ் ஆபீஸில் கிங் என்பதை நிரூபித்துள்ளார்.

Ajith Kumar: ஷங்கரின் அடுத்த படத்தில் அஜித் வில்லனாக நடிக்கிறாரா?

அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ இயக்குனர் விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி மாற்றபட்டதால் படத்திற்கான வேலைகள் தாமதமாகி வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார்.

ALSO READ  Kollywood: ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லருக்கான நேரம் வந்துவிட்டது

இதற்கிடையில், ராம் சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள ‘RC 15’ படத்தில் பவர்ஃபுல் கேமியோ ரோலில் நடிக்க இயக்குனர் ஷங்கர் அஜித்தை அணுகியதாக டோலிவுட்டில் ஒரு சலசலப்பு உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது. அதுபோன்று RC-15 படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் அத்தகைய பேச்சுக்களை மறுத்துள்ளன, மேலும் அஜித் கேமியோவில் நடிக்க விரும்பவில்லை என்றும் அவரது முழு கவனம் ‘ஏகே 62’ இல் இருப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply