Home Cinema News Dhanush: அந்த படத்துடன் போட்டி போட வேண்டாம் – தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள்

Dhanush: அந்த படத்துடன் போட்டி போட வேண்டாம் – தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள்

35
0

Dhanush: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் ஃப்ளாப் ஆகிய நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானவை. அடுத்ததாக தனுஷ் நடித்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் 22 டாம் தேதி தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாக இருக்கிறது.

ALSO READ  Thug Life: ‘தக் லைஃப்’ கமல்ஹாசனுடன் இணைந்த 'நாயகன்' நடிகர்

Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன்

அனிருத் இசை அமைத்திருக்கும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் என்று மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். ரீலீசுக்கு தயாராகி வரும் இந்த படம் வருகிற செப்டம்பர் மாத 30 ஆம் தேதி வெளியிட படக்குழவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  The Road motion poster: த்ரிஷா நடிக்கும் தி ரோட் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

Dhanush: அந்த படத்துடன் போட்டி போட வேண்டாம் – தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள்

ஆனால் அதில் ஒரு மிக பெரிய சிக்கல் என்னவென்றால் அதே 30 ஆம் தேதி ஆன அன்றைய தினம் மணிரத்னம் பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் இதற்கு போட்டியாக தனுஷ் படம் வெளியானால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டம் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். அதோடு பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வர வேண்டாம் என்று தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Leave a Reply