Home Cinema News Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

55
0

Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதி மைசூர் அரண்மனையில் தொடரவிருப்பதாக தெரிவிக்கின்றன.

2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, என்று பல பிரபலங்கள் இணைந்து நடித்த படம் சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில் இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். லாரன்ஸ் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய ஒரு காமெடி கலந்த திரில்லர் படமாக இருக்கும். மிகபெரிய எதிர்பார்ப்போடு சந்திரமுகி 2 உருவாகிவருகிறது.

ALSO READ  Allu Arjun: இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் அல்லு அர்ஜுனுடன்?

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாகுபாலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கிறார். நடிகை த்ரிஷாவிடம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தபட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் த்ரிஷவால் படத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக சில நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ALSO READ  Suriya 42 : தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிட்ட 'சூர்யா 42' படத்தின் சமீபத்திய அப்டேட்.!

Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தில் இணையும் புதிய பிரபலம் யார் தெரியுமா?

சந்திரமுகி 2 கதாநாயகியாகி:

பின்னர் ‘கும்கி’ பாடத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் கதாநாயகியாகி நடித்த லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருபதாக தகவல் தெரிவிக்கின்றன. கும்கி படத்திற்கு பின் லட்சுமி மேனன் தமிழில் பல படங்களில் கமிட்டாகி நடித்திருந்தார். அதன் பின் இடைப்பட்ட காலங்களில் காணாமல் போனார் தற்போது மீண்டும் சந்திரமுகி 2 படத்தின் மூலமாக விட்ட இடத்தை தொடர வருகிறார். சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதி மைசூர் அரண்மனையில் தொடரவிருப்பதாக தெரிவிக்கின்றன.

 

Leave a Reply