Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் சென்னையில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ரஜினி லைகா புரொடக்ஷன்னுடன் இரண்டு பட ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற தகவலை ஏற்கனவே நாம் அறிந்தோம்.
Also Read: பொன்னியின் செல்வன்-1 அமெரிகவில் புதிய சாதனையை படைத்துள்ளது
இப்போது தமிழ் வட்டாரங்களில் இருந்து வரும் சில தகவல்கள் எனவென்றால், இந்த குறிப்பிடப்பட்ட இரண்டு படங்களில் ஒன்றை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குவார் என்று செய்திகள் வருகின்றன. இதற்கு முன் ரஜினி தனது மற்றொரு மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கோச்சடையான் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2012 இல் தனுஷை வைத்து ‘3’ படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற செய்தியே ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவித்தால் அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும்.