Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் கடாரம் கொண்டான். விக்ரம் மற்றும் அக்க்ஷராஹாசன் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். அபீஹாசன் மற்றும் லீனா சப்போட்டிங் ரோலில் நடித்திருக்கிறார்.இப்படத்திற்கு தற்போது வரையிலும் நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளது. அதிலும் விக்ரமின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. கடாரம் கொண்டான் படத்தின் முதல் இரண்டுநாள் வசூல் சாதனை விவரம் பற்றி தற்போது வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடி ரூ வரை வசூல் அளித்துள்ளதாம்.

Read More

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக, வரும் 23ம் தேதி சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தமன்னா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு. தமன்னாவுக்கு தற்போது மார்க்கெட் டவுன் தான். அவர் தற்போது புதிதாக நடிக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஹாரர் காமெடி படமான இதனை ரோஹின் இயக்குகிறார். இந்தபடத்தில் தமன்னாவுக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார்.கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் யோகி பாபு. அதைத்தொடர்ந்து, ஐரா படத்திலும் அவருடன் முக்கிய ரோலில் நடித்தார். அஞ்சலியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னாவுடனும் யோகி பாபு சேர்ந்து நடிக்கறார். தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்தார், இந்த இரண்டு படங்களும் நல்ல வசூல் செய்திருக்கின்றன.

Read More

அஜித்தின் நேர்கொண்ட பார்வை பெண்களுக்கு எதிராக நாட்டில் நிறைய தவறான விஷயங்கள் நடந்துகொண்டே வருகிறது, அதற்கான தீர்வு எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை, பெண்களுக்கு நடக்கும் கொடுமையை பற்றி பேசும் படமாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை உருவாகி இருக்கிறது.அஜித் போன்ற ஒரு முன்னணி நடிகர் இந்த படத்தில் நடிப்பதால் அஜித்துக்கு பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறலாம். நேர்கொண்ட பார்வை ஹிந்தி பிங்க் ரீமேக் படம் என்பது ரசிகர்கள் மறந்து, இது தல அஜித் படம் என்று ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க உரிமை மட்டும் ரூ.50 முதல் ரூ. 55 கோடி வரை விலைபோனதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை என்பது தெரியவில்லை.

Read More

நடிகர் சூர்யாவின் NGK படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யா ஷங்கர் இணையும் மேடையாக மிக பிரமாண்டமாக அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி இந்நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது, இப்படத்தினை தயாரிக்கும் லைகா ப்ரோடக்‌ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷங்கர் பணியாற்றியுள்ளதால் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது, இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.அதன் பிறகு விஸ்வாசம் படம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் படத்தில் இவர் நடிக்கயிருக்கறார், இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read More

ஆகஸ்ட் முதல் இந்தியன் 2 ஆரம்பம் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமான படம் இந்தியன் 2. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்து பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியானதால் படம் தேர்தலுக்குப் பின் ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் கூட சொன்னார்கள்.இருப்பினும் தற்போது புதிய தகவலாக படத்தில்ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். அவர்களுக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம்தானாம். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.படப்பிடிப்பு ஐந்தாறு மாதங்கள் தள்ளிப் போனதால் பட வெளியீடும் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல் கொஞ்சம் தள்ளிப் போகும் என்கிறார்கள். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது தீபாவளி வெளியீடா இருக்கவும் வாய்ப்புள்ளது.…

Read More