Surrogacy twist: நயன்தாராவும் மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் அக்டோபர் 9ஆம் தேதி இரட்டை மகன்களுக்கு பெற்றோராகிவிட்டதாக மகிழ்ச்சியோடு டிவிட்டரில் அறிவித்ததையடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்கள். பல வருடங்களாக டேட்டிங்கில் இருந்த இந்த ஜோடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதால் குழந்தை பிறப்பது குறித்து கேள்விகள் எழுந்தன. திருமணமாகி 4 மாதத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது சட்டவிரோததிற்குக்கு உட்பட்டது என்று பேசப்பட்டு வந்தது.
Also Read: வாடகைத் தாய் விதி மீறல் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது போலீஸ் புகார்
நயன்தாராவும் மற்றும் விக்னேஷ் சிவனும் சட்டவிரோதமான முறையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் அதை தெளிவுபடுத்தவில்லை. மேலும் அரசாங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டது மற்றும் முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால் மூன்று பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியது.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதற்கான சட்ட ஆவணங்களை சமர்ப்பித்து திருமண பதிவாளரிடம் பதிவு செய்தனர். இருவரும் டிசம்பர் 2021 இல் வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர் என்றும், ஜூன் 9 ஆம் தேதி அவர்கள் பொதுத் திருமணத்திற்கு பிறகு கூடுதல் ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நட்சத்திர ஜோடி மீதான வாடகைத்தாய் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.