Kanguva: தமிழ் நட்சத்திர நடிகர் சூர்யா தனது உடற்பயிற்சி உடலுடன் தனது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளர். சூர்யா, கங்குவா படத்திற்காக தனது கூர்மையான தாடியுடன் மகத்தான உடற்பயிற்சியில் இருக்கும் போது பிடிக்கப்பட்ட படம் தற்போது இணையத்திள் வைரளாகி வருகிறது. மேலும் அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.
Also Read: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!
சூர்யா சில காலமாக கங்குவா படத்தில் தனது போர்வீரன் கதாபாத்திரத்திற்காக பொருத்தமான உடல் கட்டமைப்புகாக கடுமையாக உழைத்து வருகிறார், சூர்யாவின் நெருங்கிய நம்பிக்கையாளரும் தயாரிப்பாளருமான ராஜசேகர் பாண்டியன் இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார், “மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. #கங்குவா (sic)”
இதுவரை சூர்யாவின் கேரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் கங்குவா. சிவா இயக்கிய இப்படம் ஒரு பீரியட் ஆக்ஷன் ட்ராமாவாக இருக்கும். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகை திஷா பதானி முன்னணி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.