Home Entertainment Viral: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பை அறிவித்தார் – உற்சாகத்தில் ரஜினிகாந்த்

Viral: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பை அறிவித்தார் – உற்சாகத்தில் ரஜினிகாந்த்

0

Viral: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகன் செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்ததாக அறிவித்தார். அவர் தனது கர்ப்பத்தின் புகைப்படங்களை முதன்முறையாகப் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். “கடவுளின் அபரிமிதமான கருணை மற்றும் எங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடன், விஷாகன் மற்றும் நானும் வேத்தின் சிறிய சகோதரனை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி இன்று 11/9/22 #Veer #Blessed. எங்கள் அற்புதமான மருத்துவர்களுக்கு நன்றி.

Viral: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பை அறிவித்தார் - உற்சாகத்தில் ரஜினிகாந்த்

ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படத்தை இயக்கிய சௌந்தர்யா, நடிகர் மற்றும் தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடியை 2019 இல் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு முதல் திருமணத்தில் வேத் என்ற மகன் உள்ளார். தலைவர் நான்காவது முறையாக தாத்தா ஆனதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர், குடும்பமே கொண்டாட்டத்தில் உள்ளது. புதிய வரவுக்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளதால் உற்சாகமடைந்துள்ளனர்.

Also Read: விஜய்யின் வாரிசு படத்தின் டிஜிட்டல் உரிமை விற்கப்பட்டது – ஓடிடி, சாட்டிலைட் மற்றும் ஆடியோ எத்தனை கோடி தெரியுமா?

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு முன்னாள் கணவர் தனுஷுடன் யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது புதிய படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version