VIRAL: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் பிரிந்ததாக அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு ரசிகர்களையும் நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் இருவரும் விவாகரத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் இணைந்து வாழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறியிருந்தார் தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா. ரசிகர்களும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் குடும்பத்தினர் ரஜினிகாந்தின் வீட்டில் சந்தித்ததாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் வீட்டில் அவரது முன்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் திருமணப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் – அதிகாரப்பூர்வ அறிக்கை
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2004 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனுஷ் தற்போது வெங்கி அட்லூரியின் வாத்தி என்ற இருமொழி படத்தில் நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்திருக்கிறார் தனுஷ்.