Home Entertainment Nayanthara Tattoo: ஸ்பெயின் சென்ற நயன்தாரா போட்ட புதிய டாட்டூ – இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

Nayanthara Tattoo: ஸ்பெயின் சென்ற நயன்தாரா போட்ட புதிய டாட்டூ – இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

104
0

Nayanthara: நயன்தாரா ஸ்பெயினில் டாட்டூ போட்டுகொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. இவர் எந்த ஒரு செயல் செய்தாலும் அதை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் செய்து கொண்டாடுவார்கள். நீண்ட காலமாக காதல் ஜோடிகளாக சுற்றி திரிந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.

Nayanthara Tattoo: ஸ்பெயின் சென்ற நயன்தாரா போட்ட புதிய டாட்டூ - இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

அதையடுத்து இருவரும் திருப்பதியில் சாமிதரிசனம் செய்துவிட்டு, தாய்லாந்திற்கு ஹினிமூன் சென்று அங்கு எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அதன் பின் இந்திய திரும்பியதும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது வேளைகளில் பிஸியாக இருந்து வந்தனர். நயன்தாரா ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தில் நடித்து வருகிறார், விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்காக தீவிரமாக ஈடுபட்டு வருவதோடு அஜித்துடன் நயன்தாரா இணைந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நட்ச்சதிர ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

ALSO READ  Jason Sanjay: ஜேசன் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்க போகிறார் - ஹீரோ தளபதி விஜய் அல்ல

Also Read: சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம் – இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் அடுத்த படத்திற்க்கு லொகேஷன் பார்க்க இருவரும் ஸ்பெயின் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே கள்ளில் இரண்டு மாங்காய் என்பதுபோல், லொகேஷன் பார்த்து கொண்டே இருவரும் ஹனிமூன் கொண்டாடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ALSO READ  VTK unseen video: வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து மல்லிப்பூ வீடியோ பாடலில் காணாத காட்சிகள்

Nayanthara Tattoo: ஸ்பெயின் சென்ற நயன்தாரா போட்ட புதிய டாட்டூ - இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஸ்பெயினில் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வரும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் சென்ற நயன்தாரா புதிதாக போட்ட டாட்டூ புகைப்படம் வைரலாகி வருகிறது. நயன்தாரா டாட்டூ போட்டுகொள்ள மிகவும் விரும்புவார். அந்தவகையில் அவரது பின் கழுத்தில் மற்றும் கையில் டாட்டூ குத்தி இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த டாட்டூகான அர்த்தம் என்ன என்று தெரியவில்லை.

Leave a Reply