Home Entertainment Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும்

Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும்

0

Netflix: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண காட்சிகள் நெட்பிளிஸ் தளத்தில் எப்படி வெளியாக போகிறது. என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை மகாபலிபுறத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொண்டனர்.

Also Read: Vaadivaasal Glimpse: வாடிவாசல் கிளிம்ப்ஸ் வீடியோ வந்துவிட்டது – சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட்

25 கோடி ரூபாய்க்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை விற்பனை செய்ததுள்ளனர். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்கிற உரிமையை பெற்றுக்கொண்டது.

Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும்

 இதற்கிடையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதற்கு முன் விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ் அனுமதி இல்லாமல் சில திருமண போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்ததால் கடுப்பான நெட்பிளிக்ஸ் தாங்கள் செலவழித்த 25 கோடி ரூபாயை திரும்ப தரகோரியும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாகவும் தகவல் பரவியிருந்தது. ஆனால் தற்போது நெட்ஃபிக்ஸ் அதை மறுத்து கூடிய விரைவில் விக்கி மற்றும் நயன்தாராவின் திருமண விடியோவை வெளியிடுவதாக அறிவித்தது. 

Also Read: Rajinikanth: பணம், பேர், புகழ், எல்லாம் இருக்கு ஆனால் எனக்கு நிம்மதி இல்லை – ரஜினிகாந்த் வருத்தம்

இந்த நிலையில் விக்கி மற்றும் நயனின் திருமண வைபவம் நெட்பிளிக்ஸ்சில் எப்படி வெளியிட போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நெட்பிளக்ஸ் ஒடிடிதளத்தில் சீரிஸ்களாக ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த சீரிஸ்சை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வடிவமைத்து வருகிறாராம். 1 மணி நேரம் 30 நிமிட காட்சிகளாக மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும், திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள், விருந்தினருடன் உரையாடல் என்று பல்வேறு சீறிஸ்களாக நெட்பிளிக்ஸ் வெளியிட திட்டமிட்டுளதாம்.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version