Home Cinema News Suriya: எதிர்பாராத கூட்டணியில் சூர்யாவுடன் பிரபல ஹீரோ

Suriya: எதிர்பாராத கூட்டணியில் சூர்யாவுடன் பிரபல ஹீரோ

17
0

Suriya: தற்போது அவரது படங்கள் தொடர்ந்து வெற்றியை பெறாத நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படம் அவரை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். என்னதான் சூரரை போற்று படம் OTT யில் வெளியானாலும் இப்படம் ரசிகர்களின் மத்தியில் பேராதரவை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான ஜெய் பீம் தமிழ் சினிமா மட்டுமல்லா தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் சர்ச்சை ஏற்படாதி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி நல்ல வரவேற்பை பெற்றது. பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் சூர்யாவிற்கு வெற்றி படமாக அமைந்தது.

Also Read: ஆழ்வார் பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த நோட்டீஸ்

சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் நடித்து வருகின்றார். சூர்யா மற்றும் பாலா 18 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது. இதையடுத்து இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கின்றார். வாடிவாசல் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளது. சூர்யா இப்படங்களை தொடர்ந்து இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  VTK Trailer & Audio: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

கெஸ்ட் ரோலில்:

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை பெற்றது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். படத்தில் என்னதான் ஐந்து நிம்டங்கள் வந்து போனாலும் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தார் சூர்யா என்பது குறிப்பிடதக்கது. தற்போது ரசிகர்கள் சூர்யாவை ரோலக்ஸ் என்றே அழைத்து வருகின்றார்கள். ரசிகர்களின் மனதில் அந்த அளவிற்கு சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பாதைந்தது. இதைத்தொடர்ந்து சூர்யா சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கிலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் இதைத்தொடர்ந்து மாதவன் நடித்து இயக் கிவரும் rocketry படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

ALSO READ  Vijay Sethupathi: குடும்ப பொழுதுபோக்கு புதிய படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி 

Suriya: எதிர்பாராத கூட்டணியில் சூர்யாவுடன் பிரபல ஹீரோ

சூர்யாவுடன் பிரபல ஹீரோ:

சூர்யா பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து கலக்கி வருகின்றார். இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் பாலா இயக்கத்தில் நடித்து முடித்தவுடன் சூர்யா சுதாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரரை போற்று படத்தின் வெற்றி பிறகு மீண்டும் இவர்கள் இணையும் படத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் சூர்யாவையுடன் இணைந்து நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. சுதா தற்போது சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கில் பிஸியாக உள்ளார். ஹிந்தி படத்தை முடித்துவிட்டு பிறகு சூர்யா மாறும் துல்கர் சல்மான் இணையும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. எனவே சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களால் பிஸியான நடிகராக வலம் வருகின்றார்.

Leave a Reply