Leo Collection 12 day: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ஆக்ஷன் படமான லியோ பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான தொடக்கத்தைக் கண்டது. தற்போது படம் வெளியாகி 10 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் வசூல் படிப்படியாக குறைந்து வருகிறது. படத்தின் இரண்டாவது திங்கள் அல்லது 12 ஆம் நாள், படம் சுமார் ரூ. 4.5 கோடி வசூலித்தது என்று இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இப்படம் தற்போது உள்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.307.95 கோடி வசூல் செய்துள்ளது.
லியோ தனது முதல் வாரத்தில் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.264.25 கோடி வசூல் செய்து, இரண்டாவது வெள்ளிக்கிழமை ரூ.7.65 கோடியும், இரண்டாவது சனிக்கிழமை ரூ.15 கோடியும், இரண்டாவது ஞாயிறு அன்று ரூ.16.55 கோடியும், இரண்டாவது திங்கள் சுமார் ரூ.4.50 கோடியும் வசூலித்தது. மேலும் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் படம் வெளியான 11 நாட்களில் மொத்த வசூல் சுமார் ரூ.530 கோடியைத் தாண்டியுள்ளது.
லியோ இந்தியாவில் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- இந்தியாவிள் 12-வது நாள் ரூ.4.50 கோடி வசூல் செய்தது.
- இந்தியாவின் மொத்தம் ரூ.308 கோடி வசூல் செய்தது.
லியோ உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- உலாம் முழுவதும் 12-வது நாள் ரூ.6 கோடி வசூல் செய்தது.
- லியோ உலகம் முழுவதும் மொத்தம் ரூ.530 கோடி வசூலித்துள்ளது.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. இதில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் பலர் துணை வேடங்களில் காணப்பட்டனர்.
இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து. ‘லியோ’ படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.