Bigg Boss Tamil S6: பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தற்போது 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலயல் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை கிட்டத்தட்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் யூகித்து விட்டார்கள் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த 6-வது சீசனில் ஷிவின் அல்லது விக்ரமன் ஆகிய இருவரில் ஒருவருக்கு பிக்பாஸ் டைட்டில் பட்டம் கிடைக்கும் என்றும் மேலும் இருவரில் விக்ரமனுக்கு பட்டம் கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Also Read: விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் டிடி மறுமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்
இந்த நிலையில் தற்போதைய செய்தி என்னவென்றால் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட தனலட்சுமி எந்த ஒரு செய்தியும் தனது சமூக வலைத்தளத்தில் பதியு செய்யாமல் இருப்பதால் அவர் உண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாரா அல்லது சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகம் தற்போது பார்வையாளர்கள் மத்தியில் வந்துள்ளது. மேலும் ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் ’சில தொழில்நுட்பத்தின் காரணமாக தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வீடியோ ஒளிபரப்பு செய்ய முடியவில்லை என்றும் தொழில்நுட்ப தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும் ஹாட்ஸ்டார் இணையத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தனலட்சுமி ஒரு சீக்ரெட் அறையில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனலட்சுமி சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டு இருந்தால் அவர் எந்த நேரமும் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வர வாய்ப்பு அதிகம் இருப்பதாக பார்வையாளர்கள் தரப்பில் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனலட்சுமி கடந்த 76 நாட்களாக ஒருசில முரண்பாடுகளுடன் இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் அவர் சரியாக தான் விளையாடி வந்தார் என்பதும் தனலட்சுமி வெளியேற்றப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் விருப்பத்தை ஏற்று மீண்டும் தனலட்சுமி பிக்பாஸ் வீட்டுக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.