Home TV Show Bigg Boss S6: ரேங்கிங் டாஸ்க் என்பது கர்சீப் போட்டு சீட் பிடிப்பது போல் அல்ல...

Bigg Boss S6: ரேங்கிங் டாஸ்க் என்பது கர்சீப் போட்டு சீட் பிடிப்பது போல் அல்ல – கமலின் அதிரடி ப்ரோமோ வீடியோ!

49
0

Bigg Boss Tamil S6: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 6-வது சீசன் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். வைல்ட் கார்டு என்ட்ரியாக 21வது நபராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் மைனா நந்தினி. இந்த வாரம் ப்ரோமோவில் ரேங்கிங் டாஸ்க் என்பது கர்சீப் போட்டு சீட் பிடிபது போல் அல்ல அது திறமை சம்பந்தபட்டது என்ற அதிரடி ப்ரோமோ வீடியோ கமல் வதுள்ளார்.

Bigg Boss S6: ரேங்கிங் டாஸ்க் என்பது கர்சீப் போட்டு சீட் பிடிப்பது போல் அல்ல - கமலின் அதிரடி ப்ரோமோ வீடியோ!

முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், இரண்டாவது வாரத்தில் இரண்டு பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். முதலில் ஜிபி முத்து வீட்டை விட்டு வெளியேறினார். எலிமினேஷன் பட்டியலில் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகள் பெற்றதற்காக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் அசால், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டு கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜனனி வெளியேற்றப்பட்டார்.

மீதமுள்ள 10 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வார கேப்டனாக மணிகண்டன் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த வார எவிக்ஷனுக்கு விக்ரமன், ரசிதா, அசீம், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, தனலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் ஹவுஸ்மேட்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற டாஸ்க் உள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் செவ்வாய் கிழமை ஆரம்பப் பள்ளி மாணவர்களாகவும், புதன்கிழமை உயர்நிலைப் பள்ளி மாணவர்களாகவும், வியாழக்கிழமை கல்லூரி மாணவர்களாகவும் விளையாட உள்ளனர்.

Leave a Reply