Home TV Show Bigg Boss: பிக் பாஸ் தமிழ் 6-யில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் பணப்பெட்டியுடன்...

Bigg Boss: பிக் பாஸ் தமிழ் 6-யில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் பணப்பெட்டியுடன் வெளியேறுகிறாரா?

99
0

Bigg Boss Tamil: பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் முதல்முறையாக போட்டியாளர்களுக்கு ஒரு நாள் பணப் பையும், மறுநாள் பணப்பெட்டியும் வழங்கப்பட்டது. முதலில் வி.ஜே. கதிரவன் செவ்வாய்க்கிழமை அன்று பணப் பையில் வைத்திருந்த மூன்று லட்ச ரூபாய் எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

Also Read: துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 8-வது நாள் வசூல் ரிப்போர்ட்

‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பெட்டியை யார் கைப்பற்றுவார்கள் என்பதுதான் இப்போது அனைவரின் பார்வையும் உள்ளது. 20 லட்ச ரூபாய்க்கு மேல் கிடைக்குமா என்று மைனா மற்றும் அமுதவாணன் இருவரும் காத்திருந்தனர். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் தான் வாங்கிக் கொள்வேன் என்று ஷிவின் கூறியிருந்தார், விக்ரமன் மற்றும் அசீம் இருவரும் அந்த வாய்ப்பை கருத்தில் கொள்ளவில்லை.

ALSO READ  Bigg Boss Tamil S6: பிக் பாஸ் சீசன் 6 தமிழுக்கு இந்த 10 பெண் போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்

Bigg Boss: பிக் பாஸ் தமிழ் 6-யில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர் பணப்பெட்டியுடன் வெளியேறுகிறாரா?

பணப்பெட்டியில் இருந்த தொகை பத்து லட்சமாக உயர்தி வெளிநடப்பு செய்ய ஷிவின் கணேசன் அழைப்பு விடுத்ததாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. 100 நாட்களுக்கும் மேலாக பிக் பாஸ் தமிழ் 6 இல் தங்கியிருந்தபோது திருநங்கை போட்டியாளர் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தார். அவரது இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியேறும் காட்சிகள் இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply