Home Trailer Varisu official trailer date out: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி உறுதி...

Varisu official trailer date out: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது

52
0

Varisu: விஜய் நடித்த குடும்ப பொழுதுபோக்கு படமான வாரிசு 2023 பொங்கல் அன்று பிரமாண்டமாக உலக முழுவதும் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கீழ தில் ராஜு தயாரித்துள்ளார். பிஸ்ட படம் ஏமாற்றத்திற்குப் பிறகு தளபதி விஜய் வாரிசு படத்தின் மூலம் மீண்டும் நடித்துள்ளார். இந்த முறை விஜய் வம்ஷி பைடிப்பள்ளி இயக்குனருடன் இணைந்து பணியாற்றினார். வாரிசு என்பது அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் விஜய் மார்க் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read: தளபதி விஜயின் வாரிசு படத்தை பார்த்துவிட்டு ரிவ்யூ சொன்ன மெகா பவர் ஸ்டார்

Varisu official trailer date out: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டது

தற்போதைய செய்தி என்னவென்றால் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த செய்தி வாரிசு படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 05:00 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தனர். இந்த தருணத்திற்காக விஜய் ரசிகர்கள் பல நாட்களாக காத்திருந்தனர், இறுதியாக, தயாரிப்பாளர்கள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இப்படம் ஏற்கனவே சென்சார் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு இன்று கிளீன் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் (169 நிமிடங்கள் ரன்டைம்) நீளமாக இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது. எஸ். தமனின் பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் சாதனை படைத்துள்ளது, மேலும் ட்ரைலர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Leave a Reply