Home Trailer Varisu official trailer out now: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Varisu official trailer out now: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

37
0

Varisu: விஜய் நடிப்பில் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கிய வாரிசு 2023 பொங்கல் அன்று பிரமாண்டமாக உலக முழுவதும் வெளிவர தயாராக உள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கீழ இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த முறை விஜய் வம்ஷி பைடிப்பள்ளி தெளிங்கு இயக்குனருடன் இணைந்து பணியாற்றினார். இப்படத்தில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும் உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தார். இது ஒரு விஜய் மார்க் படமாக இருக்கும் என்று தெரிகிறது. 

Varisu official trailer out now: விஜய்யின் வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

தற்போதைய செய்தி என்னவென்றால் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த செய்தி வாரிசு படத்தின் ட்ரெய்லர். தற்போது படத்தின் ட்ரெய்லர் படக்குழுவினர் வெளியிட்டனர். சரத்குமார் தலைமையில் ஒரு பெரிய குடும்பம் அறிமுகப்படுத்தப்பட்டது, அது பிரிந்து வெளி உலகத்திலிருந்து பிரச்சனைகளை சந்திக்கும் போது, ​​குடும்பத்தின் வாரிசான விஜய் பொறுப்பேற்றுக் கொள்கிறார். பிரேம்கள் மிகவும் கலர்ஃபுல்லாக காட்சியளிக்கின்றன, பவர் சீட்ல இல்லை சார்… அதுல ஊக்கற்றா பார் அவன் கையில இருக்கு என்ற பவர்ஃபுல் டயலாக்கை விஜய் பேசுகிறார். 

வாரிசு படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீளம், அதாவது 169 நிமிடங்கள் ரன்டைம் இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது. எஸ். தமனின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு இணையத்தில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ALSO READ  Sardar trailer date: சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Leave a Reply