Home Trailer Dasara Trailer: கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி நடித்த தசரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Dasara Trailer: கீர்த்தி சுரேஷ் மற்றும் நானி நடித்த தசரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

107
0

Dasara: நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த பான்-இந்தியா திரைப்படம் தசரா. இப்படத்தின் நானி முற்றிலும் வித்தியாசமான கிராமிய தோற்றத்தில் நடித்ததால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை புஷ்பா புகழ் இயக்குனர் சுகுமாரின் உதவி இயக்குனரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தசரா படத்தில் சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் சாய் குமார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ  Laththi trailer out: விஷால் நடிக்கும் லத்தி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Also Read: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் இணைகிறார்

எஸ்.எல்.வி சினிமாஸ் அஃபிஷியல் படத்தை தயாரித்து மார்ச் 30 ஆம் தேதி இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை இப்போது வெளியிட்டுள்ளது. தசரா தெலுங்கானா அருகே சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தைச் சுற்றி, 1970 மற்றும் 80 களில் ஒரு கிராமப்புற படமாக காட்டுகிறது.ட்ரைலரில் கீர்த்தி சுரேஷ் பள்ளி ஆசிரியையாகவும், நானி பிரச்சனைகளை தேடி செல்லும் தரணி வேடத்திலும் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுக்கு தசரா பஞ்சம் இருக்காது என்பதை இந்த ட்ரெய்லர் காட்டுகிறது.

ALSO READ  Official: சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணா இசையமைத்துள்ளார். ட்ரெய்லரில் பேக்ரவுண்ட் ஸ்கோர் மற்றும் படத்தில் சிறந்த பிஜிஎம்களுக்கு குறையாது என்பதைக் காட்டுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் பாடல்களும் தரவரிசையில் இடம்பிடித்துள்ளதால், ரசிகர்கள் தசரா ரிலீஸுக்கு தியேட்டர்களில் காத்திருக்கின்றனர்.

Leave a Reply