Home GOSSIP Vijayakanth: விஜயகாந்த் மீண்டும் நடிக்கவுள்ள தகவல் குறித்து பிரேமலதா விளக்கம்

Vijayakanth: விஜயகாந்த் மீண்டும் நடிக்கவுள்ள தகவல் குறித்து பிரேமலதா விளக்கம்

33
0

Vijaykanth: விஜயகாந்த் நடிக்க மீண்டும்  ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ள செய்தி பற்றி பிரேமலதா தற்போது விளக்கமளித்துள்ளார்.

vijayakanth

1980களில் தமிழ் திரை உலகத்திற்கு விஜயகாந்த் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், தற்போது இவர் படங்களிலும் நடிப்பதில்லை இருந்தும் இவர் சினிமாவில் நடிக்க மீண்டும் விஜயகாந்த் ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ள செய்தி பற்றி பிரேமலதா தற்போது விளக்கமளித்துள்ளார்.

விஜய் ஆன்டனி சலீம் படத்தின் மூலம் ஹீரோவாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். கோடியில் ஒருவன், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். விஜய் ஆன்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் தற்போது அவதாரம் எடுத்துள்ளார்.  தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்  எழுதி, இயக்கும் கமர்ஷியல் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். கமல் போக்ராவின் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது.

படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப்படம் மூலம் தான் மீண்டும் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி  விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியது.

தற்போது விஜயகாந்த் திரைப்படத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது இது தொடர்பாக விளக்கமளித்த பிரேமலதா, விஜயகாந்த் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜயகாந்த்  ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ALSO READ  அஜித்தின் குணத்தை கண்டு நான் வியந்தேன்: வித்யாபாலன்

Leave a Reply