Home GOSSIP AK 62 VS Thalapathy 67: தீபாவளிக்கு ஏகே 62 மற்றும் தளபதி 67 படங்கள்...

AK 62 VS Thalapathy 67: தீபாவளிக்கு ஏகே 62 மற்றும் தளபதி 67 படங்கள் ரிலீஸா – அடுத்த வெடி ரெடி

64
0

AK 62 VS Thalapathy 67: 2023 பொங்கல் விருந்தாக விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு இரண்டு படங்களும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு மத்தியில் ஒன்றாக வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன் போஸ்டரில் ஆரம்பித்த போர், ரிலீஸ் தேதி வரை தொடர்ந்தது. இரண்டு படங்களின் டீசர் மற்றும் ட்ரைலரைக் கொண்டாட்டத்திற்கு பிறகு, வெளியாகியுள்ள இரண்டு படங்களின் முதல் நாள் பிரீமியர் காட்சியைப் பார்த்து ரசிகர்கள் எதிர்பார்ப்பை தளர்த்தியுள்ளனர்.

AK 62 VS Thalapathy 67: தீபாவளிக்கு ஏகே 62 மற்றும் தளபதி 67 படங்கள் ரிலீஸா - அடுத்த வெடி ரெடி

வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் நன்றாக இருக்கிறது. மொத்த வசூலைப் பார்த்தால் தற்போது துணிவு முதலிடத்திலும், வாரிசு இரண்டாம் இடத்திலும் உள்ளன. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி, தமிழகத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. துணிவு படத்தை போனி கபூர் தயாரித்து, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. இப்படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார். எப்படியும் பொங்கல் விடுமுறையில் இரண்டு படங்களுமே வசூலை வாரிக்குவிக்கும் என்று தெரிகிறது. இந்த நேரத்தில் ரசிகர்கள் அடுத்த வெடியை கொளுத்தினர்.

ALSO READ  Kollywood: தங்கலான் படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவின் மாஸ் லுக் இதோ

AK 62 VS Thalapathy 67: தீபாவளிக்கு ஏகே 62 மற்றும் தளபதி 67 படங்கள் ரிலீஸா - அடுத்த வெடி ரெடி

வாரிசு படத்தை முடித்த விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். துணிவு முடித்த அஜித், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல 62 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் உருவாகி வருவதால், இரண்டு படங்கள் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் வாரிசுக்கும், துணிவுக்கும் இணையத்தில் போர் நடத்தி கொண்டிருந்த ரசிகர்கள் கூட்டம், தற்போது ஏகே 62 vs தளபதி 67 பக்கம் திரும்பியுள்ளது என்பது தற்போதைய செய்தி.

Leave a Reply