Home First single DSP first single out: விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

DSP first single out: விஜய் சேதுபதி நடித்த ‘டிஎஸ்பி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

39
0

DSP: பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘டிஎஸ்பி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று படக்குழுவினர் ஆல்பத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நல்லா இருமா என்ற பாடலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது.

DSP first single out: விஜய் சேதுபதி நடித்த 'டிஎஸ்பி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

டி இம்மான் இசையமைத்த ‘நல்லா இருமா’ பாடலானது, இது திரையரங்குகளை உற்சாகப்படுத்துவதற்காக ஒரு சுறுசுறுப்பான பாடல் ஆகும். விஜய் முத்துப்பாண்டியின் வரிகளில் செந்தில் கணேஷ் மற்றும் மாளவிகா சுந்தர் ஆகியோருடன் இணைந்து மூத்த பின்னணி பாடகர் உதித் நாராயண் இந்த பாடலைப் பாடியுள்ளார். பழம்பெரும் பாடகர் உதித் நாராயணின் குரலில் பல வருடங்களுக்கு பிறகு ஒரு கவர்ச்சியான தமிழ் பாடலை கேட்பது மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

ALSO READ  Official Varisu first single: விஜய் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட்

‘நல்ல இருமா’ நடன மாஸ்டர்கள் தினேஷ் மற்றும் ஷெரீ ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். ‘டிஎஸ்பி’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அனுக்ரீத்தி வாஸ் ஜோடியாக நடிக்க, புகழ் மற்றும் ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

Leave a Reply