Home Entertainment Vijay Sethupathi weight Loss: விஜய் சேதுபதி திடீரென உடல் எடையை குறைத்தார் – வைரலாகும்...

Vijay Sethupathi weight Loss: விஜய் சேதுபதி திடீரென உடல் எடையை குறைத்தார் – வைரலாகும் புகைப்படம்

67
0

Vijay Sethupathi: தமிழ் ரசிகர்களின் இதயங்களை ஆளும் விஜய் சேதுபதி, இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவராக தற்போது தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் நேர்மறை, வில்லன் மற்றும் துணை வேடங்களில் தைரியமாக ஏற்று நடித்துள்ளார். மிகவும் குறுகிய காலத்தில் மளமளவென மர்கட்டை எட்டிப்பிடித்த விஜய்சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

Also Read: துணிவு படத்தின் காசேதான் கடவுளடா செகண்ட் சிங்கிள் அப்டேட் – உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் டி.எஸ்.பி திரைப்படம் படம் வெளியாகியது படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு தோற்றத்திற்கும் பொருத்தமாக இல்லை என்றும் ரசிகர்களும் விமர்சகர்களும் கூறிவந்தனர். தற்போது அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஒருபுகைபடத்தை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி, அந்த புகைப்படத்தில் அவர் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாக காணப்பட்டார். நடிகர் மம்முட்டியுடன் ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘விக்ரம்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் இந்த ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு ‘கடைசி விவசாயி’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இருப்பினும், பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டிஎஸ்பி’ பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

ALSO READ  Viduthalai: விடுதலை படப்பிடிப்பின்போது வெற்றிமாறனுடன்-சுதா கொங்கரா வெளியிட்ட புகைப்படங்கள்

Leave a Reply