Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முதல் முறையாக தனது சுவரஸ்யமான பள்ளி பருவ காதலை கூறி கேட்பவர்களின் மனதை உருகவைத்துளார்.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கபடும் விஜய்சேதுபதி பன்முக கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஒரு ஹிட் ஹீரோவாக அறிமுகமாகி நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நினைக்காமல் முக்கியத்துவம் உள்ள எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தனது நடிப்பு திறனால் சிற்பாக வெளிப்படுத்தியுள்ளார். அந்த வகையில் திருநங்கையாக, தந்தையாக, முதியவர் என்று தற்போது கோலிவுட்டில் அனைத்து முன்னனி நடிகர்களான விஜய், ரஜினி, கமல்ஹாசன் ஆகியோருக்கு வில்லனாக நடித்து அனைத்து நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார்.
Also Read: AK: பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களை நேரில் சந்தித்த அஜித்
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான காத்துவாகுல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு கடைசியாக வில்லனாக நடித்த விக்ரம் படத்திலும் இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. மாஸ்சான ஹீரோக்களுக்கு வில்லன் என்றாலே அது விஜய்சேதுபதி பெயர்தான் அடிபடுகிறது. இதையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் படவாய்ப்புகள் வருகின்றது. எனவே எப்போதும் பிஸியான நடைகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, தனது பள்ளி பருவ காதலை பற்றி மனம் திறந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவானத்தை ஈர்த்துள்ளது.
விஜய் சேதுபதி பகிர்ந்த பள்ளி பருவ காதல்
தான் ஜானு என்கின்ற பெண் பின்னால் நான்கு வருடம் சுற்றினதாகவும், ஆனால் கடைசிவரை அந்த பெண்ணிற்கு இது பற்றி தெரியாது, இப்போது கூட தெரியாமல் இருக்கலாம், அதன் பின் பல நாட்கள் அந்த பெண் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அதோடு என் திருமணத்திற்கு முன்பு என் தந்தையுடன் வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது அந்த பெண் போல் ஒரு பெண் நடந்து சென்றதாகவும், அந்த பெண்ணை சந்திக்க வண்டியை திருப்பினேன், எண்டா வண்டிய திருப்புரேன்னு அப்பா கேட்டாரு, அதற்கு விஜய்சேதுபதி, அப்பா நான் 4 வருஷமா சைட்டடிச்ச பொண்ணு போகுது கொஞ்சம் இருப்பா பாத்துட்டு போய்டலாம் என்று சொன்னாராம் பின் திரும்ப அவங்கள பார்க்க முடியவே இல்லையாம்.
Also Read: Vijay: புதிய தொழில் தொடங்கும் விஜய் – முக்கிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா?
இப்போ அந்த பொண்ண திரும்ப பார்க்க கூடாதுன்னு நினைக்கிறேன். அதை பத்தி யோசிச்சா அந்த பொண்ணு ஸ்கூல் யூனிஃபார்மல வரா மாதிரிதான் இருக்கும். அது ஒரு அழகான விஷயம் அந்த விஷயம் அப்படியே இருக்கட்டும், அத அழிக்க வேண்டாம்னு நினைக்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
விஜய் சேதுபதியின் பள்ளி பருவ காதலை கேட்டதும் பலரும் அவர் நடித்த 96 படம் தான் நினைவிற்கு வருகிறது என்று கூறுகின்றனர். அதோடு அவர் நடித்த 96 படம் பலரது பள்ளி பருவ வாழ்கையை நினைவு படுத்துகிறது. 96 படத்தில் இருப்பதுபோல் அந்த படத்தில் நடித்த விஜய்சேதுபதி வாழ்கையில் ஒரு ரியல் ஜானு இருப்பது உண்மையில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தான்.