Nayanthara: பார்சிலோனா செல்லும் முன் நயன்தாரா நடித்து முடித்து கொடுத்துவிட்டு புறப்பட்டிருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 7 வருடங்களாக காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அவர் திருமணத்திற்கு ஷாரூக்கான், அட்லீ, ரஜினிகாந்த், அனிருத், சூர்யா, ஜோதிகா என்று பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். அதன்பின் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இந்தியா திரும்பியதும் அவர்களின் வேளைகளில் கவனம் செலுத்தி வந்தனர். தற்போது இருவரும் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரத்திற்கு சென்றுள்ளார்கள். அது குறித்த புகைப்படங்கள் நேற்று வெளியாக வைரலானது.
Also Read: தளபதி 67 படத்தில் மாஸ் நடிகர் – லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தற்போது வெளியான தகவலின்படி நயன்தாரா தமிழ் படம் ஒன்று முடித்து கொடுத்துவிட்டு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் ஜாவான் படத்தில் நடிக்கிறார். அத்துடன் நயன்தாரா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறார். அதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்துவந்த நிலையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நயன்தாரா தனது கேரக்டரின் படப்பிடிப்பை முடித்து கொடுத்த பின் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பார்சிலோனா நகரத்திற்கு புறப்பட்டனர். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன் படத்தில் நடித்திருந்தனர்.
தற்போது இருவரும் நடித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது திருமணத்திற்கு பின் நயன்தாரா நடித்து முடித்து குடுத்த முதல் படம் இதுதான். கூடிய விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் படம் சிறப்பாக அமைந்துள்ளது என்று படகுழுவினர் தெரிவிக்கின்றனர்.