Suriya: நடிகையும் தமிழக பாஜக நிர்வாகியான காயத்ரி ராகுராம் நடிகர் சூர்யாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்று அறிய இந்த பதிவில் காணலாம்.
நடிகர் மாதவன் முதல் முதலில் அறிமுகமாகி நடித்த படம் ராக்கெட்ரி தமிழகத்தை சேர்ந்த நம்பி நாராயணன் விண்வெளி ஆய்வு துறையில் பல காலமாக விஞ்ஞானியாக பணிபுரிந்தார். 1994 ஆம் ஆண்டு அவரின் விஞ்ஞான ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தார் நாட்டிற்கு துரோகம் செய்தார் என்று அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பின் 1998 ஆம் அண்டு சட்டரீதியாக போராடி தாம் குற்றவாளி அல்ல நிருபராதி என்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார். அதோடு ஏபி.ஜே அப்துல் கலாம் குழுவிலும் சிலகாலம் பணியாற்றினார்.
Also Read: Shankar: ஷங்கரின் RC15 படத்தில் 1000 பெயர் கொண்ட பிரம்மாண்டம்!
தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி நடிகர் மாதவன் முதல் முதலில் தமாகவே இயக்கி நடித்துள்ளார். அவருடன் இணைந்து இந்த படத்தில் நடிகை சிம்ரன் மற்றும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அதேபோல் ஹிந்தியில் ஷாருக்கான் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் ஒரு நாளிதழுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
ராக்கெட்ரி படம் பலமொழிகளில் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் நம்பி நாராயண் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், ஒரு பேட்டி தரும் காட்சியில் நடித்திருப்பார். அதோடு அவரை பேட்டி எடுப்பவர் உள்ளூர் மொழியில் பிரபலமான நடிகராக இருப்பபார். பேட்டி எடுத்து முடிந்த பின் நம்பி நாராயணன் ஜெய் ஹிந்த் என்று கூறி முடிப்பார். அதேபோல் பேட்டி எடுத்த நடிகரும் ஜெய் ஹிந்த் என்று கூறுவார். ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் பேட்டி எடுக்கும் காட்சியில் நடித்திருந்தார் அப்போது பேட்டி முடிந்ததும் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறுவார்.
அதுபோல் தமிழில் சூர்யா பேட்டி எடுக்கும் காட்சியில் நடித்திருப்பார். ஆனால் அந்த பேட்டியில் ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறியிருக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை? சூர்யாவிற்கு, ‘ஜெய் ஹிந்த்’ பிடிக்கவில்லையா? அல்லது படத்தின் காட்சி அமைப்பே அவ்வாறு எடுக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி ரகுரம்.
Also Read: Shankar: ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் கனவுப்படம் – இவர்கள்தான் நடிகர்கள்
சூர்யா, ஜெய் ஹிந்த் என்று சொல்ல மாட்டாரா அது என்ன கொச்சையான வார்த்தையா? அல்லது சூர்யாவிற்கு ஹிந்தி தெரியாதால் அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ மறுதிருந்தாலோ ஹிந்தி மொழியை இலவசமாக கற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன். அப்படியில்லாமல் அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்திருந்தால் அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரி. தேசப்பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேற நாட்டிற்கு சென்று விடலாம். அதற்கு என்ன தேவையோ அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கடுமையாக தாக்கி பேசிய காயத்ரி ரகுராம் சூர்யா இதற்கு சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் திட்டமிட்டே இதை செய்தார் என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதனால் சூர்யா ரசிகர்கள் காயத்ரி ரகுராம் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதற்கு நடிகர் சூர்யா என்ன விளக்கம் கொடுப்பார் என்று பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.